Launchorasince 2014
← Stories

நீ

நீ வந்து செல்லும் அந்த சிறு சிறு நிமிடங்கள்
என் மனம் படபடவென துடிக்கும்
அந்த நிமிடங்கள் நீ எனக்கென
பிறந்தாயோ எனத் தோன்றும்
நீ வருவாயோ என காத்திருந்த நாட்கள் பல
நீ வரும் நேரத்தில் உன்னோடு நான் இருந்த நிமிடங்கள் சில....

என் சந்தோஷம்
உன் கைகள் கோர்த்துக் கொள்ள
நீ உன் கைகள் நீட்ட
நான் உன் பக்கம் வர
நீ சென்றாய், தூரம் சென்றாய்....

நீ வருவாய் என எனக்குத் தெரியும்
வந்தாய்....
வெயில் காலத்தில் பனி போல் !

உன் வாசம் என்னை தீண்டியதே
என் இரவு தூக்கம் கலைந்ததே
நீ இங்கே, நான் உன்னுடன்
பிரிந்து போவாய்  என்னைவிட்டு என்றாலும், காத்திருப்பேன் நான்
நீ மீண்டும் வருவாய் என நம்பி.

நீ தீண்டியது என் மேனியை என்றாலும்
ஜில்லென்ற சிலிர்ப்பை தந்தாய் என் ஆத்மாவில்.

என் இளமை முடிந்து
முதுமை வந்தாலும்
நான் ஆடுவேன்
என்றும் உன்னுடன் மழையே !