Launchorasince 2014
← Stories

என்றும் நான்

பெண் என்று பிறந்தேன் இவ்வுலகில்
பெண்மை கொண்ட பெயர் வைத்து அழைத்தார்கள்
நளினத்தோடு இருக்க வேண்டும் என்று வளர்த்தார்கள்
காலத்திற்கு ஏற்ப உன்னை மாற்றி கொள் என்றார்கள்

காலம் என் கையில் இருப்பது போல் உணர்ந்தேன் பள்ளி முடியும் வரை
காலம் கை மீறாது, எப்போதும் என் வசம் என்னும் வலிமையுடன் கல்லூரி முடிந்தது
காலம் கை மீறும், அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் பயணம் தொடங்கியது

எதை நோக்கி பயணிக்க என்று சற்றும் யோசிக்க வைக்கவில்லை என் காலம்
கல்லூரி முடித்த உடனே வேலை,
புதிய உலகத்தை பார்ப்பது போல் நடுங்கினேன்
புதிய உலகம் இல்லை பெண்ணே
இது நீ வாழும் உலகத்தின் ஒரு சிறு அங்கம் தான் என்றார்கள்
சிறியது என்றாலும் எனக்கு பெரியதாக தோன்றியது
தோற்றம் எவ்வாறு இருந்தாலும் அதன் உள்
என்ன உள்ளதோ அதான் உன்மை

பல உண்மைகள் கண்டேன்,
பல உண்மைகளை கற்றுக் கொண்டேன்,
பல உண்மைகளுக்காக எனை மாற்ற முயற்சி செய்தேன்

மாற்றிக்கொண்டேன், மாற்றிக்கொண்டேன்,
மாற்றிக்கொண்டேன்
என்று பல முறை எழும்பிய குரல்,
மாற்றிக்கொண்டேனோ ? என்று யோசிக்கவைத்தது
மாறுவேனோ அல்லது மாற்றப்படுவேனோ தெரியவில்லை
ஆனால் இக்காலத்திற்கேற்ப நடிக்க கற்றுக்கொண்டேன்

இதோ என் பயணம் மறுபடியும் புதிதாய் புன்னகையுடன் தொடங்கியது.

Your work is your legacy.
Protect it with NAK-ID.

Free to start. Takes two minutes. Lasts forever.

Start for Free →

Free account · No credit card required