Are you sure you want to report this content?
Illustration by @luciesalgado
முகங்களும் அறியா, மொழிகளும் புரியா, பிறந்த நொடிப் பொழுதில்:
புரிந்த முதல் ஸ்பரிசம் அவளது!
பத்து திங்களாய் கண்கள் காணா விசித்திரங்களால் பேடித்திருந்த சேயை
மொழிகள் புரியா வார்த்தைகளால் தைத்த(தைரியமூட்டிய) அக்கண்கள்:
யாழிசை புரியா அச்சிறு மனமே புரிந்தது தாயிசை!
மனிதன் எனும் சொல்லில் அடங்காது மனிதி என உணரும் பருவம்,
தான் அதுவரை உணர்ந்திரா புதிய கிளர்ச்சியை, படபடப்பை கொடுத்த அக்கண்கள்:
காமம் தெரியா அந்த அரும்பு மீசை அறியும் காதல் என்பதை!
தன்னவளாய் இன்னொருவளைக் கைபிடித்த சமயம்,
தன் உறவுகள் துறந்து, தன்னவனே தீர்க்கம் என உருக்கும் அக்கண்கள்:
ஆணதிகாரம் ஏற்ற அக்கர்வமகன் வியப்பான் பெண்மையை!
வாழ்வும் புரிந்தும், அறமும் புரிந்தும் அதை மறுத்து வாழ்வியலைத் தேடி அலையும் நாட்கள்,
தன் தாய் புரியவைத்த அதே ஸ்பரிசத்தை நினைவூட்டும் அக்கண்கள்:
தன்னலம் மறந்து தன் மகளில் தன்னை மறக்கும் அம்மகன் அறிவான் மெய்மையை!
மனமொடிந்து உடலொடிந்து கட்டிலில் கிடந்து நினைவுகளை திரும்பிப் பார்க்கும் பொழுதுகள்:
அக்கண்கள் உணர்த்தியதே வாழ்க்கை எனப் போற்றுவான் இறைவியை!
55 Launches
Part of the Life collection
Updated on May 27, 2017
(2)
Characters left :
Category
You can edit published STORIES
Are you sure you want to delete this opinion?
Are you sure you want to delete this reply?
Are you sure you want to report this content?
This content has been reported as inappropriate. Our team will look into it ASAP. Thank You!
By signing up you agree to Launchora's Terms & Policies.
By signing up you agree to Launchora's Terms & Policies.