யார் தான் அழுகிறார்கள்?
தனக்கான ஒன்றை பெற்ற பின்.!
தனக்கான ஒருவரை இழக்கும் முன்.!
வலிக்கான வடிவம் கண்ணீரில்
தான்..!
மகிழ்ச்சிக்கான வடிவமும் அதே
கண்ணீரில் தான்..!
ஆனந்தத்தின் உச்சத்தில் விழும் கண்ணீர்,
ஒரு கவலையின் தொடக்கத்திலே விழுந்துவிடுகிறது..!
ஒரு பெருந்தனிமைக்குள் சிரிக்க முடிவதில்லை
ஒரு பெருஞ்சபையில் அழுக
முடிவதில்லை..!
யாருக்குமான புன்னகை..!
யாருக்குமான அழுகை..!
இரண்டிலும் அலாதி கடந்த
ஆனந்தம் உண்டு..!
இருந்தும் யார் தான்
அடைகிறார்கள்!?
அழுகிறார்கள்!?
கண்ணாடியை தவிர்த்து.!