Launchorasince 2014
← Stories

மரணம்

புத்தகங்கள் வரிசையாக அடுக்கியும்,சிதறியும் கிடக்க அறை காட்சியளித்தது.மனதில் ஒரு அகலமான காட்சியை ஓட விட்டு சுய இன்பம் செய்து முடித்து விட்டு எழுந்து ஒரு பெரிய மூச்சு விட்டேன். அகலமாக ஒட விட்ட காட்சியில் அவள் இருந்தால். ஆம்!அவள் தான்.ஒரு மாலை பொழுதில் என் மனதில் வந்து தேங்கியவள்.என்னை விட இரண்டு வயது அதிகமாக இருக்கும். இருக்கட்டும்.இருந்துட்டு போகட்டும். அந்த வயதெல்லாம் என் ஆசைக்கு தெரியாது. ஆண்டாண்டு காலம் இந்த சமுதாயம் முன் வைக்கும் எந்த ஒரு விதிகளுக்கும் ஒத்து போகாதவன் நான் என்று என்னையே நம்ப வைத்துக் கொண்டிருக்கிறேன். அது இருக்கட்டும். அவளது வயதை பற்றி எனக்கு கவலை இல்லை.கவலை எல்லாம் எனக்கு நான் ஏன் பிறந்தேன் என்பது மட்டும் தான்.
இந்த பிறப்பு ஒரு துரதிர்ஷ்டம்.ஆம் துரதிர்ஷ்டம் தான். நான் ஏன் அவளை நினைக்க வேண்டும்.அவளை நினைத்து அதை எல்லாம் செய்ய வேண்டும்.
               மரணம் வரும் வரை அவளையே நினைத்துக் கொண்டு இருக்கப் போகிறேன். மரணம் என்னைக்கு வரும் என்பது தெரியவில்லை.அந்த மூக்கையும்,கண்களையும் எல்லாம் நான் வர்ணிக்க விரும்பவில்லை. அவ்வாறு வர்ணிப்பது சலிப்பான விசயம். எத்தனை கவிதை இந்த பெண்களை பற்றி. சலித்து விட்டது.
               காதலிப்பவர்கள் எல்லாம் போய் தற்கொலை செய்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்கள் கவிதை கருமத்தை எல்லாம் உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
               இந்த உலகத்தில் பவப்பட்டவர்கள் எல்லாம் யார்? என்று என்னைக் கேட்டால் காதலிப்பவர்கள் தான் என்று கூறிவிட்டு சிரிக்க தொடங்கி விடுவேன்.
               நான் காதலிக்க துப்பில்லாதவன் என்பதால் தான் இப்படி எல்லாம் சொல்கிறனா? ம்ம்ம்..இருக்கும். இருந்துட்டு போகட்டும்.
               அவள் நினைப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டேன்.வாங்கிவிட்டேன் இந்த எழுவெடுத்த கஞ்சாவை.இழுத்தேன் இரண்டு முறை என்னவொரு சுகம்.அடுத்த நாள் காலையில்  எழுந்தது ஒரு கேள்வி.ஆண்டாண்டு காலம்  இந்த போதையை மிகைப்படுத்தி விட்டார்களா? இருக்கலாம். இருந்தால் தான் என்ன.
               மரணம் தான் இந்த உலகில் அழகானது. அதிசயமற்றது.இந்த உலகில் அதிசயமானதெல்லாம் ஆபத்தானது,அபத்தமானது.ஆம்! அப்படி தான் என்னைப் பொருத்த வரை.என்ன அழகு இந்த மரணம்.அழகென்று தெரிந்தும் அதை அனுபவிக்க முடியவில்லை.ஒரு வகையில் மகிழ்ச்சி. நிச்சயமாக அதை அனுபவைத்து விடுவேன் என்பதை நினைக்கும் போது.இன்று இல்லை.உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு வெளியே வைத்திருந்தார்கள். அவன் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு வாழைத் தோப்பில் தூக்கு
               கொடுமையான சிந்தனைக்குள் மாட்டி தவித்துக் கொண்டிருந்த அவன் மாட்டிக் கொண்டான். வாழை மரத்துக்கு ஒத்து கொடுத்திருந்த மூங்கில் மரத்தில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தூக்கு மாட்டிக் கொண்டான்.அழுகை சத்தம் நிரம்பி கிடக்க ஒரு கழுகு வானத்தில் வட்டமிட்டு கொண்டிருந்த்து.தெரு நாய் ஒன்று அழுபவர்களை பார்த்து கொண்டிருக்க,எதிரில் இருக்கும் ரோட்டோரத்தில் வயதான ஒருவர் நடு வயதிருக்கும் ஒரு பெண்ணுக்கு கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தார்..