ஒருவருக்காக சிரிக்க வேண்டும்
ஒரு நாள் முழுவதும் சிரிக்க வேண்டும்
ஒருவருக்காக அழுக வேண்டும்
ஒரு நாள் முழுவதும் அழுக வேண்டும்
பேருந்திற்காக நிற்கும் போதும்
டீக்காக காத்திருக்கும் போதும்
சாப்பிடும் போதும்
தூக்கம் வராத போதும்
பிடித்த பாடலை கேட்கும் போதும்
மனம் இயல்பு நிலையில் இயங்க தவறும் போதும்
நினைவில் ஓடுபவர் தான்
அந்த ஒருவர்..!
மனதை முழுமையாக பயத்தில் நனைக்கிறது
காற்றின் வேகத்தை மனதில்
திருப்புகிறது
வயதை திரும்ப திருப்ப
மனதில் ஒலிக்க செய்கிறது
மரணம் ஒருவருக்காக மட்டும்
இல்லை என்பதை உணர்த்துகிறது
அந்த ஒரு நாள்..!
பிறப்பையும்,இறப்பையும்
ஒரே கணத்தில்
வெறுக்க செய்துவிடுகிறது
காலமும்,மனமும்.!