Are you sure you want to report this content?
Illustration by @dariaesste
Don't worry, not a quarantine motivation!
ஆன்னிகி ஒரு நாள் சரியா ஆறு மணிக்கு அலாரம் வச்சி ஏழு மணிக்கு தப்பா எழுந்தேன். எங்க அம்மா, என் தாயி, தோசை கல்லுல மாவு சுத்திட்டே, டேய் நம்ம பொண்ணு பாக்க போறோனு சொன்னாங்க. எனக்கு இப்போ தலையே சுத்திறிச்சு. ஆட அமா ஏதோ சொல்லுவாங்கலே innocent நான் தாங்க. சரி போயிட்டு வரலாமுனு நல்லா கை அளவு ஷாம்பு போட்டு, அறை மணி நேரம் குளியலை முடித்து கொண்டு கிளம்பினேன். சந்தனம் பூசிய வெள்ளை மேலாடை, கருப்பு கால்சட்டை, ஷூவேல்லாம் போட்டு மாப்பிளை கணக்கா போண. பொண்ணு வீட்டுக்கு போய் உட்கார்ந்தாச்சி. டீ கொண்டு யாரோ வர மாறி தோன்றியது . பொண்ணு தான் வறானு நல்ல நிமிர்ந்து உட்காந்தேன். அவங்க அம்மா டீ ஒட. அண்ணே இன்னொ போண்டா சி பொண்ணு வறலனு mindvoice வேற எனக்கு. அம்மா கொண்டு வந்தாலும் நல்லா தா இருக்கு டீயே சொன்ன. கொஞ்சம் நேரம் என்ன வித்துட்டு இருந்தாங்க, சம்பளம் கீம்பலம் எல்லாம். ஒரு வழியா பொண்ணு வந்துச்சு . சீலை என்ன நிறம்னு பாக்கறதுக்கு உள்ள, பொண்ண போக சொல்லிட்டாங்க. யாராவது பொண்ணுட்ட தனியா பேசுறியானு கேப்பாங்கனு வெயிட் பண்ண. ஒருத்தன் கேட்டான், அவங்க அப்பன். சரி டானு சொல்லிருப்பேன் ஆனாலும் சரிங்கனு சொன்னேன். மஞ்சள் நிற சீலை உடுத்தி நல்லா ஆரோ, எட்டோ மடிப்பு எடுத்து நல்லா அழகா கட்டி இருந்தாங்க சேலைய.அதற்க்கு ஏத்தார் போல் வளையல் கூட. வெட்க்க பட்டு நா எட்டி பாக்கறது போல, அவ தலையில் இருந்து, கழுத்து வழியா இரு பக்கமும் மல்லிகை பூவும் எட்டி பார்த்தது. சட்டென்று ஒரு கவிதையை தள்ளி விடலாம் என்று மனதில் சில வரிகளை நினைத்தேன்,
அடியே மஞ்சள் நீலவே,
சுட்டெரிக்கும் சூரியன நீ,
பூக்களில் சூரியக்காந்தியா நீ,
மாம்பழமா நீ,
என்னை சறுகாக்கும் முதிர்ந்த இலையா நீ,
என் சாம்பாறே, சறுகாகி சறிந்து போனேன் உன்னால்.
தோன்றிய இவ்வரிகளை சொல்ல முற்பட்டேன், ஆனால் அதற்கு முன்னால் அவள் ஏதோ கூற முன் வந்தால்,
"தரிசனம் தேடி வந்த பக்த்தனே நான் முன்பே வேர் ஒருவனுக்கு தரிசனம் வழங்கி விட்டேன்".
என்றால்... மௌனமாக நின்றேன், என்ன யோசிக்கிறீர் எனக் கேட்டால், வெள்ளையும் கருப்பும் luck இல்ல போல என சிரித்தேன்!
56 Launches
Part of the Humor collection
Updated on July 02, 2020
(2)
Characters left :
Category
You can edit published STORIES
Are you sure you want to delete this opinion?
Are you sure you want to delete this reply?
Are you sure you want to report this content?
This content has been reported as inappropriate. Our team will look into it ASAP. Thank You!
By signing up you agree to Launchora's Terms & Policies.
By signing up you agree to Launchora's Terms & Policies.